தமிழ் வான் அவை நிகழ்வுகளைக் கண்டுகளிக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

தமிழ் வான் அவை பற்றி


செந்தமிழ் அந்தஸ்து பெற்ற எம்முடைய தமிழ் மொழி காலத்தால் முந்திய தொன்மை மிக்க மொழியாக இருக்கின்றது. தமிழ் மொழியிலே எண்ணில் அடங்காத இலக்கியப் பொக்கிஷங்கள் குவிந்து கிடக்கின்றன. அவ் இலக்கியச் சுவைத் தேன் அருந்தும் முக்கிய நோக்கத்துடன் தமிழ் வான் அவை என்னும் பன்னாட்டு இணையவழி இலக்கியச் சந்திப்பு 2020 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கொரொனா காலப்பகுதியில் வீட்டிலே அடைந்து கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொது நிகழ்ச்சிகளை நடத்த முடியாது இருந்தது. அதனால் இந்தியா N.G.M. கல்லூரி முனைவர் சுகந்தி பத்மநாதன் அவர்கள் இணைய வழியில் இலக்கியச் சந்திப்பை ஜும் வழி நடத்துவோமா என்று கேட்டார். அதற்கமைய இப்பன்னாட்டு இலக்கியச் சந்திப்பை ஜும் வழி ஆரம்பித்து இலக்கிய கர்த்தாக்களை அழைத்து உரையாடச் செய்யலாம் என்று தீர்மானித்தோம். இவ்வாறுதான் இவ் அவை ஆரம்பிக்கப்பட்டது 

இப்போது 

உலகத்தின் பல பகுதியிலும் இருந்து இலக்கிய கர்த்தாக்களை அழைத்து உரையாற்ற வைக்கின்றோம் . அதனைக் கேட்டு இன்புறுவதற்காக பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளுகின்றார்கள். 

மாதம் ஒரு தடவை அல்லது 2 தடவை இலக்கியச் சந்திப்பு நடைபெறும் 

நிகழ்வுக்கு ஏற்றது போல் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாசகர்களே உங்கள் கருத்துக்களைப் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்